HELLO Fm
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HELLO Fm, Radio Station, Colombo.
04/05/2017
அஜித்தின் விவேகம் பட காட்சிகளை பார்த்த பிரபல நடிகர்- என்ன கூறியிருக்கிறார் பாருங்களேன்...
மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் விவேகம் பட டீஸர் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் டீஸருக்கு பதிலாக விவேகம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தெறி மாஸாக வெளியாகி இருந்தது.
அதேபோல் அஜித் பிறந்தநாளுக்கும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர்.
நடிகர் விக்ரம் பிரபுவும் தன்னுடைய வாழ்த்துக்களை அஜித்திற்கு கூறியிருந்தார். அதோடு விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். விவேகம் படத்திற்காக அஜித் தன்னையே அர்ப்பணித்துள்ளார்.
உங்களை போல நானும் அஜித்தை திரையில் பார்க்க விரும்புகிறேன் என்று டுவிட் செய்திருக்கிறார்.
சசிகலாவை விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மூவரும் தங்களை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை தண்டனை அனுப்பவித்து வரும் வரும் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுக்க கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளவரசி, சுதாகரன் தரப்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்தது போன்று தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற பதிவாளர் விசாரணைக்கு வரலாம் எனவும் அப்போது மனுவை ஏற்பதா , நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
02/05/2017
வெளியானது தரவரிசை பட்டியல்: இலங்கை எத்தனையாவது இடம்?
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்க அணி (123 புள்ளிகள்) முதலிடத்திலும், அவுஸ்திரேலிய அணி (118 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.
இந்திய அணி (117 புள்ளிகள்) 5 புள்ளிகள் அதிகரித்து ஒருஇடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி (115 புள்ளிகள்) 2 புள்ளிகள் அதிகரித்தாலும், ஒரு இடம் சறுக்கி 4-வது இடத்தை பெற்றது.
இங்கிலாந்து அணி (109 புள்ளிகள்) 5-வது இடமும், இலங்கை அணி (93 புள்ளிகள்) 6-வது இடமும், வங்காளதேச அணி (91 புள்ளிகள்) 7-வது இடமும்,
பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 8-வது இடமும், மேற்கிந்திய அணி (79 புள்ளிகள்) 9-வது இடமும், ஆப்கானிஸ்தான் (52 புள்ளிகள்) 10-வது இடமும்,
ஜிம்பாப்வே அணி (46 புள்ளிகள்) 11-வது இடமும், அயர்லாந்து (43 புள்ளிகள்) 12-வது இடமும் வகிக்கின்றன.
02/05/2017
மூன்றாம் உலகப்போரால் அச்சம்: பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தும் பொதுமக்கள்
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருவதால் மூன்றாம் உலகப்போரின் விளைவுகளில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளின் அன்றாட நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் உலகப்போர் குறித்து மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், பூமிக்கு அடியில் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்து தரும் அமெரிக்காவை சேர்ந்த Atlas Survival Shelters என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரான Ron Hubbard என்பவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ‘இந்த ஒரு மாதத்தில் மட்டும் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்துக்கொடுக்க வந்துள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
அணுகுண்டு தாக்குதலின்போது உயிரை பாதுகாத்துக்கொள்ள இப்பதுங்கு குழிகள் பயன்படுகின்றன.
நிலப்பரப்பிற்கு கீழ் ஒரு சிறிய குடில் போன்ற ஒரு புகலிடத்தை அமைத்துக்கொடுக்கும் பணியை தான் இந்நிறுவனம் செய்து வருகிறது.
இதுபோன்று ஒரு பதுங்கு குழியில் 2 பேர் வரை தங்குவதற்கு இந்நிறுவனம் 25,000 டொலர் கட்டணமாக வசூலிக்கிறது.
10 பேர் வரை ஒரு குடும்பமாக தங்குவதற்கு 1,50,000 டொலர் கட்டணமும், 117 பேர் வரை தங்குவதற்கு 1.4 மில்லியன் டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக Ron Hubbard தெரிவித்துள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo