Banu Daily Vlogs
🌍 Life, Travel & Cooking
Daily life moments | Simple cooking | Travel vlogs
Real life • Real taste • Real stories ❤️
15/05/2026
PayPal has officially enabled direct inward remittances and money receiving in Sri Lanka 🇱🇰
A big step forward for freelancers, digital entrepreneurs, and online businesses.
More opportunities, easier global payments, and better access for everyone.
14/05/2026
🛑 BREAKING NEWS - இத்தாலிய பொலிஸ் படையில் வரலாறு படைத்த இலங்கை சிங்கம்! 🛑
🔴இத்தாலி வரலாற்றில் முதன்முறையாக 'கரபினேரி' (Carabinieri) படைப்பிரிவின் தளபதியாக இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்! 🇮🇹🇱🇰
இத்தாலியின் மிக உயரிய பாதுகாப்புப் பிரிவான 'கரபினேரி' (Carabinieri) இராணுவப் பொலிஸ் படையில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயதான பாக்யா சொலங்கா ஆராச்சி (Bhagya Solanga Arachchi) என்ற இளம் பெண் தலைமைப் பொறுப்பை ஏற்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்! 🤩🔥
யார் இந்த சாதனைப் பெண்? 🧐
♦️பூர்வீகம் - இலங்கையின் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஹென்றி சொலங்கா ஆராச்சி - புனித அண்ணா தம்பதியினரின் புதல்வி.
♦️வளர்ச்சி - 1982-இல் இத்தாலிக்குக் குடிபெயர்ந்த இவரது பெற்றோர், மிலன் நகரில் வசித்து வருகின்றனர். அங்கேயே பிறந்து வளர்ந்த பாக்யா, இன்று அந்த நாட்டின் பெருமைமிகு அதிகாரியாக மாறியுள்ளார்! 🇮🇹
ஏன் இது மிகப்பெரிய சாதனை? 🏆
✅ படிப்பு மட்டுமல்ல, துணிச்சலும் - வணிகவியலில் பட்டம் பெற்ற இவர், சிங்களம், இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் கில்லாடி! 📚🗣️
✅ கடுமையான தேர்வுகள் - இத்தாலிய இளைஞர்களே திணறும் கடினமான நுண்ணறிவுத் தேர்வுகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அசால்ட்டாக முறியடித்தவர். 💪✨
✅ தளபதி நியமனம் - ஆறு அடி உயரம் கொண்ட இந்தத் "தங்க மங்கை", பயிற்சியின் போது காட்டிய அபார திறமைக்காகவே நேரடியாக 'தளபதி' (Commander) அந்தஸ்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்! 👮♀️⚡
🔴வெளிநாடு ஒன்றின் இத்தகைய பலம் வாய்ந்த பாதுகாப்புப் படையில், ஒரு இலங்கை வம்சாவளிப் பெண் தலைமைப் பொறுப்பு வகிப்பது இதுவே முதல் முறை! 🇱🇰❤️
⭕எம் நாட்டுப் பெண்ணின் இந்த விஸ்வரூப வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்துக்களைப் பகிருவோம்! 👇💬
#இலங்கை #இத்தாலி #சாதனைபெண் #வென்னப்புவ
12/05/2026
சிறிய அளவிலான முட்டை கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கான திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் அரச கால்நடை வைத்திய பிரிவினுள் ஏற்கனவே முட்டைக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் அடுத்ததாக பயனாளி ஏற்கனவே 50 முட்டைக்கோழிகளை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும் நமது திட்டத்தின் மூலம் பயனாளி தன்னுடைய பண்ணையை 150 தொடக்கம் 200 கோழிகள் வளர்ப்பதற்காக விஸ்தரிப்பதற்கான திட்டமே இது இம் முட்டை க்கோழி வளர்ப்பின் முட்டை கோழி வளர்ப்பதற்கான விஸ்தீரனத்திற்காக பயனாளி தன்னிடம் ஏற்கனவே உள்ள கொட்டில் அல்லது புதிய கொட்டில் ஒன்றினை நிர்மாணிக்க வேண்டும் திணைக்கள பங்களிப்பாக அது உச்ச தொகையாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் 150 ஆயிரம் தொகை வழங்கப்படும் பயனாளி தன்னுடைய பங்களிப்பாக 3 லட்சத்துக்கு அதிகமான பெறுமதியான கொட்டில் மற்றும் கோழி வளர்ப்பு அதற்கான தீவனம் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிதி வசதியினை கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும் அவருடைய கொட்டில் அமைந்துள்ள காணி அவருடைய சொந்த காணியாக காணப்பட வேண்டும் இல்லாத பட்சத்தில் காணி உரிமையாளர் உடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் இதற்கு பொருத்தமான பயனாளிகள் தங்கள் பிரிவுகளில் காணப்படுமானால் உடனடியாக அரசர் கால்நடை வைத்திய அலுவலகத்தனுக்கு வருகை தந்து தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள் தங்கள் ஒத்துழைப்புக்கு மேலான நன்றி அரசர் கால்நடை வைத்திய அலுவலகம் ஏறாவூர்
12/05/2026
Copy Post
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல ஆலோசகர் டாக்டர் ஓ.வி.ஜி.எல். வீரசேனவும் ( லலீந்திர), மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.ஏ.என். சியம்பலாபிட்டியவும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 9 அன்று GMOA வேலைநிறுத்தம் நடந்தபோது, S. திலக்ஷிகா என்ற கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்தியது.
விசாரணையில் தெரியவந்தாவது, பிரசவ அறையில் இருந்த நோயாளியை பார்க்க மருத்தவர்களுக்கு 6 முறை தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை.அதே நேரத்தில் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்ததாக போலியான பதிவுகள் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் செய்திருந்தனர்.
இதனால் அரசு பணிநேரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்தது, கடமையை புறக்கணித்தது, தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது.
என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் DGHS அவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், இடைநீக்க காலத்தில் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், முகவரி மாற்றம் இருந்தால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி இன்று பேசுபொருளாக இருக்கிறது. குறித்த வைத்தியருக்கு இது ஒன்றும் புதிதல்ல. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இவருடைய காலத்திலேயே அதிக சிசு மரணம் பதிவாகியுள்ளது.
இவரால் பறிபோன பிஞ்சு உயிர்களில் எனது பிள்ளையும் ஒன்று. பத்து மாதம் சுமந்து கனவோடு பிள்ளையை கையில் ஏந்த காத்திருந்த எங்களுக்கு பிள்ளையின் இறந்த உடலத்தையே கையில் ஏந்த நேர்ந்தது. இதற்கு காரணம் இந்த வைத்தியரின் பணத்தாசை தான்.
கடந்த 2020 .12. 14 அன்று எங்கள் பிள்ளை இவர்களுடைய பணத்தாசை க்கும் , அலட்சியத்துக்கும் பலியானாள். இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு , இலங்கை மருத்துவர்கள் சபை என்பன விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்னும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியே பேச தயாராக இல்லை. காரணம் கெஞ்சுவார், பேரம் பேசுவார் அல்லது மிரட்டுவார். இவை அனைத்தும் எங்களுக்கும் நடந்தது. அனைத்தையும் கடந்தே எமது மகளுக்கான நீதிக்காக நாங்கள் போராடுகிறோம்.
மேலும், தனது குற்றங்களில் இருந்து தன்னை பாதுகாக்க GMOA (அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ) எனும் தொழிற்சங்கத்தை தனது பாதுகாப்பு கவசமாக பாவிப்பார்.
இந்த நாட்டின் நீதித்துறை மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம் !
10/05/2026
தெரிந்து கொள்வோம், பாதுகாப்பாக இருப்போம்...
09/05/2026
பிரேசில் நாட்டில் 19 வயது இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, இரு வேறு நபர்கள் தந்தையாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்’ (Heteropaternal Superfecundation) எனப்படும் இந்த மிக அரிய வகை நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
19 வயது இளம் பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்குத் தந்தை என அவர் கருதிய ஒரு நபருக்கு டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்தபோது, அதிர்ச்சிகரமான முடிவு வெளியானது. அந்த நபரின் டிஎன்ஏ ஒரு குழந்தையுடன் மட்டுமே ஒத்துப்போனது, மற்றொரு குழந்தையுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் குழப்பமடைந்த அந்தப் பெண், அதே நாளில் தான் மற்றொருவருடன் உறவு கொண்டதை நினைவு கூர்ந்தார். அந்த இரண்டாவது நபருக்குச் சோதனை செய்தபோது, அவர் மற்றொரு குழந்தைக்குத் தந்தை என்பது உறுதியானது.
வழக்கமாக ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் ஒரு முட்டை மட்டுமே வெளியாகும். ஆனால், சில நேரங்களில் ‘ஹைப்பர் ஓவுலேஷன்’ (Hyperovulation) காரணமாக இரண்டு முட்டைகள் வெளியாகலாம். அந்தப் பெண் குறுகிய கால இடைவெளியில் இரு வேறு ஆண்களுடன் உறவு கொள்ளும்போது, அந்த இரண்டு முட்டைகளும் வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறுகின்றன. விந்தணுக்கள் பெண்ணின் உடலுக்குள் சில நாட்கள் உயிர்வாழ முடியும் என்பதால், இது சாத்தியமாகிறது.
விலங்கினங்களான நாய், பூனை போன்றவற்றில் இது சாதாரணமாக நடந்தாலும், மனிதர்களிடையே இது மிகவும் அரிதானது. இதுவரை உலக அளவில் அதிகாரப்பூர்வமாக சுமார் 20 வழக்குகள் மட்டுமே இதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே தாயின் கருவில் வளர்ந்தாலும், மரபணு ரீதியாக ‘அரை சகோதரர்கள்’ (Half-siblings) என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மனித உடலின் சிக்கலான அமைப்பிற்கு இதுவே சாட்சி” என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், குழந்தைகளின் சட்டப்பூர்வமான பொறுப்புகள் மற்றும் பராமரிப்பு குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
09/05/2026
இது என்ன look uh சூனியக்காரி night விளக்கு புடிச்சிட்டு போற மாரி 😁
08/05/2026
🚢 நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்! பரவும் உயிர்க்கொல்லி வைரஸ்! இலங்கைக்கு ஆபத்தா? 🔴
🔴கடல் கடந்து வரும் ஒரு செய்தி இப்போது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது! 🌍 ஆப்பிரிக்கக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு சுற்றுலாப் பயணிக் கப்பலில், ஆபத்தான 'ஹான்டா வைரஸ்' (Hantavirus) பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
🔴நடந்தது என்ன? 🧐
சுமார் 147 பயணிகளுடன் சொகுசாகப் பயணித்த அந்தப் பெரிய கப்பலில், திடீரென ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்களும், பாதிப்புகளும் ஏற்படவே... இப்போது அந்த கப்பல் எங்கும் நுழைய முடியாமல் நடுக்கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது! ⚓🚫
⭕இந்த வைரஸ் எதனால் பரவுகிறது? 🐭
பொதுவாக எலிகள் மூலமே இந்த வைரஸ் பரவுகிறது. ஆனால், இந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குப் பரவும் வகை சற்று வித்தியாசமானது எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 😨
🔴இலங்கைக்கு பாதிப்பு உண்டா? 🇱🇰🤔
மக்கள் அச்சப்படத் தேவையில்லை! இதோ சில முக்கிய காரணங்கள்..
✅ தூரம் - இந்தக் கப்பல் தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கடற்பரப்பிலேயே (Cabo Verde) உள்ளது.
✅ தனிமைப்படுத்தல் - சர்வதேச விதிகளின்படி, இவ்வாறான கப்பல்கள் எந்த நாட்டுத் துறைமுகத்திற்குள்ளும் நுழைய அனுமதிக்கப்படாது.
✅ பரவும் விதம் - இது கோவிட் போல காற்றிலோ அல்லது வேகமாகவோ மனிதருக்கு மனிதன் பரவுவது கடினம்.
சுருக்கமாகச் சொன்னால் - இது ஒரு சர்வதேசச் செய்தியே தவிர, இலங்கையர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றல்ல.
🔴பாதுகாப்பாக இருப்போம், தேவையற்ற அச்சத்தைத் தவிர்ப்போம்! 🛡️✨
மேலதிக விபரங்களுக்கு எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்! 👇
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Colombo