EDF G MEDIA

EDF G MEDIA

Share

General Welfare moral development leads to develop the nation

29/06/2026
29/06/2026

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆதில் சேர் அவர்களின் ஜனாஸா செய்தி மிகுந்த கவலையையும் மனவேதனையையும் எமக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

எமது பிரதேசத்தில் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வுக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை. அவர் விதைத்த அறிவும் நல்லொழுக்கப் பணிகளும் பலரின் வாழ்க்கையில் நீங்காத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் அனைத்து நற்செயல்களையும் ஏற்றுக்கொண்டு, அதற்கான சிறந்த கூலியையும் வழங்கி, அவரின் கப்ரை ஒளிமயமாக்கி, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக. ஆமீன்.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கின்றோம்.”

எமது பாடசாலைக்கும், எமது மாணவர்களுக்கும் அவர் செய்த சேவைகளையும், உதவிகளையும் EDF சங்கம் சார்பாக நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

யா அல்லாஹ் அவரை மன்னிப்பாயாக!

அவர் மீது அருள் புரிவாயாக!

அவரைப் பாதுகாப்பாயாக!

அவரின் குற்றங்களை மன்னித்தருள்வாயாக!

அழுக்கு நீக்கப்பட்ட வெள்ளை ஆடை அழுக்கிலிருந்து தூய்மையாக்கப்படுவது போல் அவரைப் பாவங்களிலிருந்து தூய்மையாக்குவாயாக!

அவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பாயாக!

மேலும் கப்ரு வேதனையிலிருந்தும் நரக வேதனையிலிருந்தும் அவரைப் பாதுகாப்பாயாக!

ஆமீன்

Want your organization to be the top-listed Non Profit Organization in Galgamuwa?
Click here to claim your Sponsored Listing.

Address


31/1, Main Street
Galgamuwa
60700

Opening Hours

Monday 14:45 - 17:30
Tuesday 14:45 - 17:15
Wednesday 14:45 - 17:30
Thursday 14:30 - 17:30