Jaffna Transgender Network
Volunteer-run network in Jafnna working to build community livelihoods for trans, q***r and gnc (gender-non-confirming) individuals.
09/04/2026
ஒவ்வொரு மனிதனும் அவர்கள் விரும்பும் உடலில் வாழ்வதே உண்மையான சுதந்திரம். திருநர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு உடலில் சிறைப்பட்டிருப்பதை உணர்கிறார்கள். அவர்கள் விரும்பும் அடையாளத்தோடு வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை என்பது வெறும் விருப்பம் அல்ல, அது அவர்களது உடல் மற்றும் உளவியல் ரீதியான அடிப்படைத் தேவை. இந்த உரிமையை சட்டரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பெற்றுத் தருவது ஒரு சமூகமாக எமது கடமையாகும்.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ் தொடர்பான வழக்கு, திருநர்களது அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான சூழலில் உள்ளது.
அவர்களது உடலை அவர்கள் தீர்மானிக்கட்டும். அவர்களது அடையாளத்தை அவர்கள் தீர்மானிக்கட்டும். அதற்கு இந்தச் சமூகம் தடையாக இருப்பதைக் களைந்து, அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுப்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.
29/07/2025
JTN ஒருங்கிணைந்த சமூக தளத்தில்
* இரவு நேரப் பொழுது நிகழ்வு *
LGBTQIA + சமூகத்தினர் அனைவரும் ஒன்று கூடி இரவு பொழுதை அன்பான முறையில் ஓய்வெடுக்க இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தோம்.
28/06/2025
எமது கதைகளையும் வாழ்வியலையும் மைய நீரோட்ட அரசியலில் வைத்து நோக்க முடியாது. அவை எம் அடையாளங்களைப் போல பல்வகைமையானவை.
இந்த
சுயமரியாதை மாதக் கொண்டாட்டத்தில் எமது அடையாளங்களையும் கதைகளையும் பகிர்ந்துகொள்வதென்பது ஒரு போராட்டம்.
நாம் நாமாக இருப்பதற்கான போராட்டம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Jaffna