JR GROUP

JR GROUP

Share

business

26/03/2024

மேற்கத்தேய பழங்களை விரும்பி வாங்கும் நாம்! கொய்யாவின் அதிசய பலன்களை மறந்து ஏன்?

நம் மக்களில் பலர் கொய்யாக்காயை சுத்தமாக வாங்குவது இல்லை.

நோயுற்ற உறவினர்களை காண செல்லும் போது கூட ஆப்பிள், ஆரஞ்சு தான் வாங்குவோமே தவிர கொய்யா வாங்குவது இல்லை.

ஆனால், கொய்யாவில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

கிட்டத்தட்ட ஆப்பிளை விட கால்வாசி விலையில் கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளை விட நன்மைகள் உள்ளது என கூறினால் நம்ப முடிகிறதா?

ஆம், இரண்டு பழங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

100 கிராம் ஆப்பிளில்

15 கிராம் மாவுச்சத்து
0.3 கிராம் புரதம் உள்ளது.
விட்டமின் C - 7% = 4.5 IU
விட்டமின் A - 1% = 54 IU உள்ளது.

100 கிராம் கொய்யாவில்

13 கிராம் மாவுச்சத்து
2.5 கிராம் புரதம் உள்ளது.
விட்டமின் C - 380% = 228.3mg
விட்டமின் A - 12% = 624 mg உள்ளது.

இப்படி மினரல், விட்டமின் அளவுகளை கொண்டு கணக்கிட்டால் ஆப்பிளை விட பன்மடங்கு உயர்ந்தது கொய்யா.

மேலும், கொய்யாவில் ரத்த சர்க்கரையை ஏற்றும் அளவான Glyceminc Index வெறும் 32%. ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழை, போன்ற பல பழங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் தூண்டப்படாது. உடல் எடையும் கூடாது.

ஆரோக்கியமாகவும், உடல் எடை குறைக்கவும் நினைக்கும் நபர்கள் தினசரி ஒரு கொய்யாவை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வீட்டிலேயே வளர்த்து இலகுவில் பயன் பெறலாம். இந்த கொய்யா எனும் அற்புதத்தை!

நன்றி..!! ♥️

Want your business to be the top-listed Grocery Store in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Jaffna
4000