Shiv_Eye_Frame
An Architect, Enthusiastic Photographer & Musician
28/04/2024
நகர சங்கீர்த்தனம். சங்கீர்த்தனம் என்பது தனியாக ஒருவர் மட்டுமல்லாது குழுவாக இணைந்து இறைவனின் நாமங்களை பாடுதல் எனப் பொருள்படும். இங்கே இந்த புகைப்படங்களானது ஸ்ரீ சத்திய சாயி ஆராதனா தினத்தன்று திருநெல்வேலி சத்தியசாயி சேவா நிலையத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாகவே ஒவ்வொரு போயா தினங்களிலும் மற்றும் சிவராத்திரி போன்ற விசேடதினங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அதில் இயன்றவரை நானும் பங்கு கொள்வதுண்டு. அதிகாலை நான்கரை மணிக்கு ஓங்காரம், சுப்ரபாதம் என்பன இடம்பெற்று பின்பு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நிலையத்தை சுற்றியுள்ள இல்லங்கள் நிறைந்த வீதி வழியாக இந்த ஆன்மீக நிகழ்வு இடம்பெறும். இதன் முக்கிய குறிக்கோள் இந்த அதிகாலை நேரத்தில் நித்திரைவிட்டு எழுகின்ற போது நபர்கள் இறை நாமத்துடனும் தெய்வீக அதிர்வுகளுடனும் தங்களுடைய நாளை தொடங்க வேண்டும். மற்றும் இறைவனின் நாம மகிமையால் சுற்று சூழலும் ஆன்மீக வழியிலே தூய்மையாக்கப்படும். இதில் இணைந்து கொள்கின்ற பக்தர்கள் கஞ்சிரா, கைத்தாளம் டோலக், போன்ற இசைக்கருவிகளை இசைத்த வண்ணமும் பஜனை பாடல்களை உடுத்த ஒளியில் ஒன்றாக பாடிய வண்ணமும் கடந்து போகின்ற வீதியிலே அமைந்துள்ள ஆலயங்களை வணங்கி கற்பூர ஆராதனை செய்த வண்ணமும் இடம்பெற்று மீண்டும் காலை 6 மணி அளவில் மீண்டும் நிலையத்தை சென்றடைவர். உண்மையில் அவ்வளவு தெய்வீக ஆனந்தத்தை நான் பலமுறை அனுபவித்திருக்கின்றேன். இதன் போதான சில புகைப்படப் பதிவுகள் உங்களுக்காக.....
மேலும் பல பதிவுகளுக்கு விரும்பியவர்கள்
Sathya Sai Seva Centre
Link - https://www.facebook.com/SSCJaffna?mibextid=ZbWKwL
எனும் முகப்புத்தகத்தில் காணலாம்.
நன்றிகள்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna