Shritharan Media
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shritharan Media, Media/News Company, Jaffna.
26/03/2026
சிறீதரன் எம்பியை சந்தித்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதி: வடக்கின் நிர்வாக இடைவெளி குறித்து விரிவான கலந்துரையாடல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தியதோடு, யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புவது (Revitalization) மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதன் ஊடாக, அங்குள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைச் சீரமைப்பது குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது."
Meeting with UN Resident Coordinator: MP Shritharan discusses governance gap in the North
ITAK Member of Parliament Sivagnanam Shritharan met with the United Nations Resident Coordinator, Marc-André Franche, on Tuesday (24/03/2026) at the UN office (IOM) in Jaffna.
During the meeting, extensive discussions were held on the current political and socio-economic situation in the Northern Province. The UN Resident Coordinator was briefed on the significant governance gap caused by the prolonged delay in holding Provincial Council elections, and the daily challenges faced by the people as a result.
In particular, he emphasized that the indefinite postponement of elections has weakened devolution and led to stagnation within administrative structures. Discussions also focused in detail on revitalizing the post-war economy of the North and addressing youth unemployment by creating new job opportunities and effectively utilizing local resources to rebuild the economy.
United Nations Sri Lanka
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Jaffna