Yarl Rider
This Page Make enjoy full
07/12/2025
அரை மில்லியன் ஆப்பிரிக்கர்களுக்கு தண்ணீர் கொடுத்த குட்டி நாயகன் – ரயன்
ரயன் ஒரு சாதாரண குடும்ப சூழ்நிலையில் கனடாவில் பிறந்த பையன். 1991 மே மாதம் பிறந்தான்.
அவன் ஆறு வயதில் பள்ளியில் இருந்தபோது, ஆசிரியர் அவனுக்கு ஒரு கதை சொல்கிறார்
“ஆப்பிரிக்காவில் சில கிராமங்களில் குழந்தைகள், மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமலே வாழ்கிறார்கள். சிலர் அதனால் வாழ்நாளில் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள்.”
ரயன் இதை கேட்டதும் அவன் பிஞ்சு மனசு நொந்தது.
அவனனுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் வீட்டில் உள்ள குழாயிலே போய் தண்ணீர் குடிப்பது மட்டுமே தெரியும் ஆனால் இந்த தண்ணீர் கூட இல்லாமல் சிலர் உயிர் இழக்கிறார்கள் என்பதை நினைத்து வருந்தினான்
அவன் ஆசிரியரிடம் சென்று கேட்டான்,
“அங்கே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும் எப்படி தண்ணீர் கொண்டு செல்லலாம்?”
ஆசிரியர் சொன்னார்,
“WaterCan என்ற ஒரு அமைப்பு அவர்கள் சுமார் $70 க்கு ஒரு கிணறு தோண்டி தண்ணீர் அமைத்து கொடுத்து வருகிறார்கள்.”
அந்த குட்டி பையன் ரயன் நேரடியாக வீட்டுக்கு வந்தான்.அம்மாவிடம்
“அம்மா … நான் ஆப்பிரிக்கா குழந்தைகளுக்கு ஒரு கிணறு வாங்க வேண்டும். எனக்கு $70 வேண்டும்,” என்றான்.
அவனது தாய் சிரித்தாள்.
“நீ நல்லா படிச்சு சம்பாதிச்சு உன்னோட காசுல தான் வாங்க முடியும்,” என்றாள்.
அவன் மிகவும் கவலையா நம்ம எப்படி சம்பாதிக்கலாம் யோசிக்க ஆரம்பித்தான்
அவன் அப்போதே முடிவு செய்து அம்மவுக்கு சின்ன சின்ன வேலை செய்து சிறிய அளவுக்கு காசு வாங்கினான் அதை சேமிக்க தொடங்கினான். வீட்டிலும் தோட்டத்திலும், அப்பகுதி மக்களிடமும் சிறிய வேலைகளை செய்து பணம் சேமித்தான். சில மாதங்கள் கழித்து, $70 காசு சேர்ந்தது.
ஆனா WaterCan அமைப்பிடம் சென்று கேட்டபோது உண்மையான செலவு $2,000 என தெரிய வந்தது.
அவன் ஒரு நொடியும் தயங்கவில்லை எப்படியாவது
“நான் சம்பாதித்து திரும்பி வருவேன்,” என்றான்.
அவன் மீண்டும் வேலை செய்து பணம் சேமித்தான். சகோதரர்கள், நண்பர்கள், அப்பகுதி மக்கள் எல்லோரும் உதவி செய்து தேவையான பணத்தை எப்போடியோ சேர்த்து விட்டான் உடனே அவன் படித்த பள்ளியின் உதவியுடன் அவனுக்காக1999-ல், வட உகாண்டாவின் ஒரு கிராமத்தில் அந்தக் கிணறு தோண்டப்பட்டது. அந்த மக்கள் கிணற்றை பார்த்து மகிழ்ச்சியுடன் ஓடி வந்தனர்
அந்த கிராமத்தில் ரயன் அகானா என்ற சிறுவனை சந்தித்தான்.
அவன் பள்ளிக்கு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வந்ததை ரயன் அறிந்தான் மனம் முழுவதும் அதிர்ந்தது.
அவன் பெற்றோரிடம் கேட்டான்,
“அம்மா அவனுக்கு உதவ நான் செல்லலாமா?”
2000-ல் ரயன் அந்த கிராமத்திற்கு சென்றான்.
நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கா மக்கள் வரிசையாக நின்று,அவனை வரவேற்று
“ரயன்! ரயன்!” என்று முழங்கினர்.
ரயன் மனதில் மிக பெரிய மகிழ்ச்சி
இன்று ரயன் பெரியவர். 33 வயது.
Ryan’s Well Foundation நடத்துகிறார்.
400-க்கும் மேற்பட்ட கிணறுகள்
அவன் மூலம் தோண்டப்பட்டுள்ளன.
நூராயிரக்கணக்கான குழந்தைகள்
தண்ணீரை குடித்து பயன் பெற்று
வருகின்றனர்.
குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், மக்கள் கிணறுகளை பராமரிப்பது, தண்ணீர் கையாள்வது எப்படி என்று கற்றுத்தருவதை தொடர்ந்து செய்கிறார்.
இந்தக் கதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது:
ஒரு நல்ல மனம் இருந்தால்
சின்ன கையாலே பெரிய அதிசயம் செய்ய முடியும்.
சின்ன பையனா இருந்தாலும், கனவுடன் முயன்றால் உலகத்தை மாற்றலாம்.
நல்லது செய்யும் மனம் தான் உண்மையான இறைவன்
வணக்கம்
பாலாஜி ஸ்ரீனிவாசன்
ஆஸ்திரேலியா
04/12/2025
உலகப் போர் 0: மலை போன்ற ரஷ்யாவை வீழ்த்திய ஜப்பான் எனும் சிறு கல்!
19-ம் நூற்றாண்டின் தொடக்கம் அது. ஐரோப்பிய நாடுகள் தான் உலகின் "தாதாக்கள்" என்று மார்தட்டிக்கொண்டிருந்த காலம். அதிலும் ரஷ்யா, உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட ஒரு ராட்சத தேசம். மறுபுறம் ஜப்பான், ஆசியாவின் ஓரத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவு. "யானைக்கும் எறும்புக்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள்?" என்று கேட்டால் உலகம் கண்ணை மூடிக்கொண்டு ரஷ்யா என்றுதான் சொல்லும். ஆனால், 1904-ல் நடந்த அந்த அதிசயம் வரலாற்றையே மாற்றிப்போட்டது.
ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அவர்களிடம் பெரிய கடற்படை இருந்தாலும், அவர்களின் துறைமுகங்கள் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக உறைந்துவிடும். இதனால் கப்பல்கள் செல்ல முடியாது. வருடம் முழுவதும் உறையாத ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இதற்காகச் சீனாவின் 'போர்ட் ஆர்த்தர்' (Port Arthur) பகுதியை ரஷ்யா குத்தகைக்கு எடுத்தது. ஆனால், இது ஜப்பானின் கண்களை உறுத்தியது. ஏற்கனவே அந்தப் பகுதியை ஜப்பான் ஒரு போரில் வென்றிருந்தாலும், உலக நாடுகள் மிரட்டி அதைத் திருப்பிக் கொடுக்க வைத்திருந்தன. இப்போது அதே இடத்தை ரஷ்யா ஆக்கிரமித்ததும், ஜப்பானியர்களின் ரத்தம் கொதித்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இனி பேசி பயனில்லை, அடித்துத்தான் கேட்க வேண்டும் என்று ஜப்பான் முடிவெடுத்தது.
1904 பிப்ரவரி 8... ரஷ்யா எதிர்பார்க்காத ஒரு நள்ளிரவு. அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் முன்பே, ஜப்பானிய தளபதி அட்மிரல் டோகோ ஒரு தந்திரமான வேலையைச் செய்தார். போர்ட் ஆர்த்தரில் நின்றுகொண்டிருந்த ரஷ்யக் கப்பல்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் ரஷ்யாவின் பலமான கப்பல்கள் சிதறின. நிலைகுலைந்து போன ரஷ்யா, சுதாரிப்பதற்குள் ஜப்பான் அடுத்தடுத்த அடிகளைக் கொடுத்தது. கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைத்து ரஷ்யத் தளபதியின் கப்பலையே வெடிக்கச் செய்தார்கள்.
இந்தச் செய்தி ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கோலஸை எட்டியது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், ஐரோப்பாவில் இருந்த தனது பிரம்மாண்டமான 'பால்டிக் கடற்படையை' (Baltic Fleet) ஜப்பானை நோக்கி அனுப்பினார். ஆனால், விதி வேறு கணக்குப் போட்டது. வரும் வழியில் சாதாரண மீன்பிடிப் படகுகளை ஜப்பானிய கப்பல்கள் என்று நினைத்து ரஷ்யா சுட, அது பிரிட்டனின் கோபத்தைத் தூண்டியது. இதனால் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட, ஆப்பிரிக்காக் கண்டத்தையே சுற்றிக்கொண்டு சுமார் 10,000 மைல்கள் பயணம் செய்து, களைத்துப் போய் ஜப்பானை வந்தடைந்தது ரஷ்யப் படை.
1905 மே மாதம்... 'சுஷிமா' (Tsushima) கடல் பகுதி. அங்கே காத்துக்கொண்டிருந்தது எமன் ரூபத்தில் ஜப்பானியப் படை. களைத்துப்போய் வந்த ரஷ்யக் கப்பல்களை, ஜப்பானின் குட்டிப் படகுகள் சுற்றி வளைத்தன. ஜப்பானிய தளபதி டோகோ 'T' வடிவ வியூகத்தை அமைத்தார். ரஷ்யக் கப்பல்கள் நேராக வர, ஜப்பானியக் கப்பல்கள் குறுக்கே நின்று சரமாரியாகச் சுட்டன. அன்று நடந்த அந்தப் போரில் ரஷ்யாவின் கனவு கடலோடு மூழ்கியது. 4000 ரஷ்ய வீரர்கள் இறந்தனர், 5000 பேர் கைதிகளாயினர். ஆனால் ஜப்பானுக்கோ மிகச் சொற்ப இழப்புதான்.
இறுதியில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு ஆசிய நாடு, ஐரோப்பிய வல்லரசைத் தோற்கடிக்க முடியும் என்று ஜப்பான் நிரூபித்த அந்தத் தருணம், உலக வரலாற்றில் 'வேர்ல்ட் வார் ஜீரோ' (World War Zero) என்று அழைக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு விதை போட்டதே இந்தச் சின்னத் தீவின் பெரிய வெற்றிதான்!
04/12/2025
சீனா தைவானை கைப்பற்றினால் உங்கள் மீது போர்தொடுப்போம் என ஜப்பான் வெளிப்படையாக அறிவித்துள்ளது..
இதனை பார்ப்பவர்களுக்கு என்னடா இது சீனா எவ்வளவு பெரிய நாடு அதனை தம்மாத்துண்டு ஜப்பான் மிரட்டுதே சீனா திருப்பி அடிச்சா ஜப்பான் என்ற நாடே இருந்த இடம் தெரியாம போய்டுமேனு நீங்க நினைக்கலாம்
அங்கதான் ஒரு ட்விஸ்டு நீங்களெல்லாம் தம்மாத்துண்டு நாடு ஜப்பான்னு நினைச்சிட்டு இருக்குற உங்களுக்கெல்லாம் அந்த நாட்டை மாணிக்கமாதானே தெரியும் அந்த நாட்டிற்கு இன்னொரு முகம் இருக்கு அதான் #பாட்சா
⬇
🐲 முதல் சைனோ-ஜப்பானியப் போர்: ஆசியாவின் சிம்மாசனம் ஆடிய கதை 🗡️
வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியம், தன்னைவிட பல மடங்கு சிறிய ஒரு தேசத்திடம் படுதோல்வி அடைவது என்பது அபூர்வமான நிகழ்வு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் பார்வையை ஆசியாவின் பக்கம் திருப்பிய அந்த அதிர்ச்சி சம்பவம் தான் முதல் சைனோ-ஜப்பானியப் போர் (1894-1895).
1. கொரியா: பதற்றத்தின் பூமி
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கொரியா (அப்போது "ஹெர்மிட் கிங்டம்" - துறவி இராச்சியம்) என்ற சிறிய நாடு ஆசியாவின் இரண்டு வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டது.
சீனாவின் பார்வை: பல நூற்றாண்டுகளாக, கொரியா சீனாவின் "துணை நாடாகவே" (Suzeainty) இருந்தது. கொரியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தங்கள் பாரம்பரிய உரிமை என்று சீனா கருதியது.
ஜப்பானின் இலக்கு: 1868 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவீனமயமான ஜப்பான் (மீஜி மறுசீரமைப்பு), தனது வளர்ச்சியை நிலைநாட்டவும், ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், கொரியாவைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடித்தது.
இந்த இரண்டு யானைகளின் சண்டைக்கு நடுவில், ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளும் 'தி கிரேட் கேம்' என்ற பெயரில் கொரியாவில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றன. இப்படி மூன்று பெரிய சக்திகள் ஒரு சிறிய தேசத்துக்காகப் போட்டியிட்டபோது, அங்கே ஒரு போர் மூள்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
2. மக்கள் புரட்சியும் சங்கிலித்தொடர் விபத்தும்
போருக்கு உண்மையான நெருப்பை மூட்டியது கொரியாவின் உள் விவகாரங்கள் தான். மன்னர் குடும்பத்தில் நிலவிய அதிகாரப் போட்டிகள், அரசாங்க அதிகாரிகளின் ஊழல், மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் மக்கள் கொதிப்படைந்தனர்.
1894 ஆம் ஆண்டு, டோங்கேக் (Donghak) விவசாயிகள் கிளர்ச்சி வெடித்தது. ஊழல் அதிகாரிகளையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதம் ஏந்திப் போராடினர்.
இந்தக் கிளர்ச்சியை அடக்க முடியாமல், கொரியா மன்னர் சீனாவின் உதவியை நாடினார். சீனா உடனே படைகளை அனுப்பியது. ஆனால், இது ஒரு கொடிய ஒப்பந்தத்தை மீறிய செயல்!
1885 இல் செய்யப்பட்ட கன்வென்ஷன் ஆஃப் டீஎன்சிங் (Convention of Tientsin) ஒப்பந்தத்தின்படி, கொரியாவுக்குள் படைகளை அனுப்பினால், இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்க வேண்டும். சீனா அறிவித்திருந்தாலும், ஜப்பான் இதை ஒரு "சமாதான மீறலாக" கருதியது. சீனாவைப் பின்தொடர்ந்து, ஜப்பானும் 'கொரியாவில் உள்ள தன் பிரஜைகளைக் காப்பாற்ற' படைகளை அனுப்பியது.
3. கடல் நடுவே மின்னல் தாக்குதல்
ஜப்பானியப் படைகள் கொரியாவுக்குள் நுழையும் முன், டோங்கேக் கிளர்ச்சி அடங்கிவிட்டது. படைகளைத் திரும்பப் பெறலாம் என்று சீனா அறிவித்தது. ஆனால், ஜப்பான் மறுத்தது. கொரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் வரை தாங்கள் வெளியேற மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தது.
இந்தக் குழப்பமான சூழலில், 1894 ஜூலை 25 அன்று போர் வெடித்தது. அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் முன்பே, கொரியக் கடற்கரையில் ஜப்பானியக் கப்பல்கள் சீனப் போர்க் கப்பல்கள் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தின. பேட்டில் ஆஃப் பூம்டோ (Battle of Pungdo) என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில், சீன வீரர்கள் படுகாயமடைந்தனர். இதுவே போரின் முதல் இரத்தம்!
இதையடுத்து, 1894 ஆகஸ்ட் 1 அன்று இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாகப் போர் தொடங்கியது.
4. மாபெரும் ராணுவத்தின் பரிதாப நிலை
அளவில் சீனா ஜப்பானை விட 25 மடங்கு பெரியது. சீன ராணுவத்தில் 6,50,000 வீரர்கள் இருந்தனர், ஜப்பானில் 2,40,000 வீரர்கள் தான். மேலும், உலகின் சக்தி வாய்ந்த ஜெர்மன் போர்க் கப்பல்கள் சீன கடற்படையிடம் இருந்தன. ஆனாலும், போர் அசுரத்தனமான வேகத்தில் ஜப்பானின் பக்கம் திரும்பியது. அதற்குக் காரணம்:
சீனாவின் பலவீனம்: குயிங் அரசவையில் நிலவிய ஊழல், ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமையின்மை மற்றும் முறையான பயிற்சி இல்லாதது.
ஜப்பானின் சக்தி: ஜப்பானியப் படைகள் நல்ல பயிற்சி, நவீன ஐரோப்பிய ஆயுதங்கள் மற்றும் துல்லியமான போர் வியூகங்களுடன் களமிறங்கின. போரின் இரகசியத் திட்டங்களை ஜப்பான் ஒட்டுக் கேட்டிருந்தது!
முக்கிய வெற்றிகள்:
பியாங்காங்கின் வீழ்ச்சி: நிலத்தில் நடந்த முதல் பெரிய போரிலேயே (செப்டம்பர் 15, 1894), சீனப் படைகள் சிதறி ஓடின. இரண்டே நாட்களில் கொரியாவின் முக்கியத் தளமான பியாங்காங் ஜப்பானிடம் வீழ்ந்தது.
யாலு ரிவர் படுகொலை: கடலில் நடந்த மிகப் பெரிய மோதலில் (செப்டம்பர் 17, 1894), சக்திவாய்ந்த கப்பல்கள் இருந்தும், சீனக் கடற்படை தளபதிகளின் தவறான முடிவுகள் மற்றும் பயிற்சி இன்மையால் கடற்படையும் நொறுங்கியது.
5. அவமானமும் படுகொலையும்
வெற்றிக் களிப்பில் இருந்த ஜப்பான், நேரடியாகச் சீனாவிற்குள் நுழைந்தது. சீனாவின் முக்கிய கடற்படைத் தளமான போர்ட் ஆர்த்தரைத் தாக்கியபோது, சீன வீரர்கள் பொதுமக்களின் உடையில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜப்பானிய வீரர்கள் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் ராணுவ வீரர்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். போர்ட் ஆர்த்தர் படுகொலை என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் ஜப்பானுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தேடித் தந்தது.
இறுதியாக, சீனாவின் கடைசி கடற்படைத் தளமான வெய் ஹைவேயும் வீழ்ச்சியடைந்தது. கடல் மற்றும் நிலத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், குயிங் பேரரசால் போரைத் தொடர முடியவில்லை. சீனாவின் கடற்படைத் தளபதி அட்மிரல் டிங் ருசாங் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
6. உலகை மாற்றிய ஒப்பந்தம்
பலவீனமடைந்த சீனா சமாதானத்திற்கு வந்தது. 1895 ஏப்ரல் 17 அன்று கையெழுத்தான ஷிமோனோசெக்கி ஒப்பந்தம் (Treaty of Shimonoseki) சீனாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக அமைந்தது.
சீனா அதிகாரப்பூர்வமாகத் தனது தோல்வியை ஒப்புக் கொண்டது.
கொரியா ஒரு சுதந்திர நாடு (ஆனால், ஜப்பானுக்கு அடிபணிந்தது).
சீனா பெரும் தொகையை (இன்றைய மதிப்பில் இலட்சக்கணக்கான கோடி) போர் இழப்பீடாக வழங்கியது.
தைவான் தீவு, பெஸ்காடோரஸ் தீவு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லியோடாங் தீபகற்பம் ஆகியவற்றை ஜப்பானிடம் நிரந்தரமாக ஒப்படைத்தது.
7. ஒரு புதிய போரின் விதை
ஜப்பான் உலக அளவில் ஒரு புதிய வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.
ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகள் இணைந்து "முப்பெரும் நாடுகளின் தலையீடு" (Triple Intervention) என்ற பெயரில் ஜப்பானை மிரட்டின. கைப்பற்றிய லியோடாங் தீபகற்பத்தை மீண்டும் சீனாவுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டன. மூன்று வல்லரசுகளுடன் ஒரே நேரத்தில் போரிட விரும்பாத ஜப்பான், அவமானத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால், இந்த அவமானமே அடுத்த போருக்கான விதையை விதைத்தது! சில வருடங்களிலேயே அதே லியோடாங் தீபகற்பத்தை ரஷ்யா சீனாவிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தபோது, ஜப்பானின் கோபம் ரஷ்யா மீது திரும்பியது. இந்தச் சம்பவம்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யா-ஜப்பானியப் போருக்கு (Russo-Japanese War) நேரடிக் காரணமாக அமைந்தது. copied
24/09/2025
புதிய சவூதி - பாக். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் 25,000 துருப்புக்களை சவுதி ஏமன் எல்லைக்கு அனுப்பியதை அடுத்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஹவுத்தி போராளிகள் "ஏமன் சவுதி எல்லையை பாகிஸ்தான் வீரர்களுக்கான கல்லறையாக மாற்றுவோம்" என்று கூறி கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்,
இது பரந்த மோதலுக்கான அச்சங்களை எழுப்பியுள்ளது. 😂
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jaffna
40000