St Joseph Engineering Solutions Privates Ltd

St Joseph Engineering Solutions Privates Ltd

Share

We are specialists in Solar power systems, Electrical services supply & installations.

TikTok · Magudam TV 02/04/2026

TikTok · Magudam TV 878 likes, 16 comments. “"சோலார் போட்டவர்களுக்கு இனி கஷ்டகாலம் தான்" – இலங்கை மின்சார சபை தொழிற்சங்கச் செயலாளர் எச்சரிக்கை!”

01/04/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/01/2026

ஏர்முனைப் பிளக்க...
எதிர்ப்புகள் தெறிக்க...
ஈரமண் வாசம் எங்கும் மணக்க!
வியர்வை முத்துக்கள் நெல்மணியாக... பொங்கிய பொங்கல் அமுதமாக....
பொங்கல் பானை அட்சய பாத்திரமாக!

எம் கைகள் பிடிக்கும் ஆயுதங்கள் சிறந்த கட்டுமானங்களை உருவாக்க.....
ஆகச் சிறந்த தொழில் நுட்பத்தில்
அவை குறைவின்றி என்றும் நிலைக்க....
உழைக்கும் கரங்களில் குறைவில்லா செல்வம் சேர...
விளைந்த இன்பம் வீடெங்கும் பாய....

மாற்றார் வியக்கும் மாற்றமாய்!
வருகிறது தை!
உறவுகள் ஒன்றுகூடி மகிழும் இன் நன்நாளில் என் உள்ளம் இனிய...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

23/08/2025

We are looking for an experienced Structural Engineer! Location: Jaffna / Vavuniya Work: Structural design for a Roofing, Solar Mounts Structures, Renovation project & consultancy. Duration: Part time, Contract basic If you are interested or know someone qualified, please contact us at 077 159 0029 / [email protected] or DM this page.
Please share this post to reach the right candidate!

04/04/2025

அன்பார்ந்த மக்களே, நீங்கள் உங்கள் சூரிய சக்தி ஆற்றல் மின்சார நிலையத்தை நிறுவும்போது சரியான ஒரு கட்டுமான நிறுவனத்தைக் கொண்டு நிறுவாமல் பணத்தை சிக்கனப்படுத்துகிறோம் என்று நீங்களே உங்கள் கூரை அமைப்பை பெரிய மேதாவிகள் போல் உங்களுக்கு தெரிந்த ஒரு மின்னோட்டு தொழிலாளிடம் கொடுத்து செய்வதன் விளைவும் அவர்களின் சரியான கட்டுமான அறிவின்மையால் ஏதோ கூரையை அடித்துவிட்டால் காணும் சோளர் கம்பெனிக்காரன் வந்து பூட்டுவான் என்று அடிமாட்டு விலையில் பூட்டி கொடுக்கும் சோளர் கம்பெனிகளிடம் உங்கள் பண முதலீட்டை மேற்கொள்வதால் வரும் விளைவு மேலே உள்ள படம் உங்களுக்கு விளக்குகின்றது.

மேற்குறிப்பிட்ட இடம் வவுனியாவில் நேத்து மூன்றாம் தேதி சித்திரை மாதம் 2025 ஆண்டில் அடித்த கனமான காற்றிடற்கு சூரிய படல கூரை குடை சாய்ந்து விழுந்து விட்டது.
இது பிரபல்யமான ஒரு நிறுவனத்தால் Ratnas travel நிறுவனத்திற்கு பூட்டி கொடுக்கப்பட்டது. அனுபவம் இல்லாத மூன்றாம் தரப்பு ஒப்பந்த வேலையாட்களை கொண்டும் மேற்படி நிலையம் நிறுவப்பட்டது என்பதே இவ் அனார்த்தத்திற்கு காரணம். இலங்கை நிலைபெறு வலு அதிகார சபையினால் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட எந்திரவியலாளர்கள், வேலையாட்களின் நேரடி கண்காணிப்பில் நிறுவப்பட்டிருந்தால் மேற்படி அனார்த்தம், இழப்பு ஏற்பட்டிருக்காது.

இந்த இந்த அனர்த்தத்திற்கு எந்த ஒரு சூரிய சக்தி சேவை வழங்குநர் நிறுவனத்தினாலும் சூரிய சக்தி தகடுகளிற்கு உத்தரவாதம் வழங்குவது கடினம். ஏனெனில் தற்போது சூரிய சக்தி படலத்திற்கு 12 வருட உத்தரவாதங்கள் Product Warranty) வழங்கப்படுகின்றது. ஆனால் இது பொருளின் சேத்திற்கான (physical damage) இல்லை. காப்புறுதி நிறுவனங்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

இதனால் தான் நாங்கள் சொல்லுகிறோம். நீங்கள் ஒரு நிறுவனத்தை தெரிவு செய்யும்போது அவர்களினால் சகல விதமான சேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய தன்னிறைவான ஒரு கம்பெனியாக அவர்கள் இருக்க வேண்டும்.

முறையான கூரை கட்டட அமைப்பு வரைபடம், கூரையில் பாரம், தூண்களின் அளவுகள் தகுதிபெற்ற ஒரு structural engineer ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் அவசியம்.

ஏனெனில் நீங்கள் நிறுவும் கூரை அமைப்பு குறைந்தது இருபது ஆண்டுகள் நிலைத்து நிற்கும் உத்தரவாதம் அளிக்க பட வேண்டும்.

வட மாகாணத்தில் யாரும் இதை முறையாக பின்பற்றுவது இல்லை. அல்லது இது பற்றிய தெளிவு இல்லை.

காசை மிச்சம் பிடிக்க தரமில்லாத பொருத்தமற்ற மூலப் பொருட்களை பயன்படுத்துவதும், எந்தக் கொம்பனி குறைந்த விலையில் பூட்டுதோ அதை நம்பி உங்கள் பண முதலீட்டை செய்வதும் உங்களுக்கு நீங்களே சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமம்.
04/04/2025

St Joseph Engineering Solutions Privates Ltd We are specialists in Solar power systems, Electrical services supply & installations.

17/01/2025

New tariff change next six months

Want your business to be the top-listed Engineering Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Industrial Estate Road, Atchuvely West
Jaffna
40150