Puthinam.com

Puthinam.com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puthinam.com, Media/News Company, Jaffna.

26/08/2024

*ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை...
1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்...
பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்...
அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்...
தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள்...TRANSLATED =

Australian scientist jumps from space 1,28,000 feet and reaches earth...
1236 km. Completed the journey in 4 minutes 5 seconds...
He clearly saw the earth moving…
Awesome video, watch it too…
plz show your children...

16/04/2023

தற்போதைய சமூக வலைத்தள ஹீரோக்கள். 🐒👇
மனித வடிவில் திரியும் அப்பாவி உயிரினத்துக்கு நம் நாட்டில் வந்த சோதனை 🐒😢

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்ததை நீங்கள் யாராவது பார்த்ததுண்டா.....??

நாய், பூனை, எலி, மாடு, போன்ற விலங்கினங்கள் போன்று இறந்த கிடக்கும் குரங்கை பார்த்ததுண்டா?

டிஸ்கவரி சேனலிலாவது பார்த்ததுண்டா?

இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் இறப்பு நாள் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக்குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம். இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பதுதான் பேரதிசயம்…
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா…!!

இறக்கும் தருவாயில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கும் தருவாயில் கரையாண் புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.

சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து அதன் உடல் மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்.

ஆஞ்சநேயர் இராமரிடம் கேட்டு பெற்ற வரங்களில் ஒன்று இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லையின்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும்.
#தெரிந்து_கொள்ளுங்கள் #

👉எல்லாம் அவன் செயல்👈

05/10/2021

🔖முந்தி #சீமெந்து பைகளின் இரு வாய் முனைகளும் நூலினால் கட்டிவரும். மேசன் வேலை செய்பவர்கள் நூலின் ஒரு அந்தத்தை மெதுவாக அவிழ்த்து இழுக்க பை தனது வாயைத் திறந்து வயிற்றினுள் உள்ள சீமெந்தினைக் காட்டும்.

சீமெந்தினைக் குழைக்க கொட்டும் போது பைக்கு வலிக்காதபடி பை கசங்காதபடி மெதுவாக சீமெந்தினைக் கொட்டி பையினை அழகாக ஒரு ஓரமாக மடித்து மழை வெய்யில் படாதவாறு வைப்பார்கள் .

இந்தப் பைகளை வாங்கி சிறிய கடதாசிப் பைகளை குடும்பத்தொழிலாகச் செய்யும் பலர் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவர்கள் இந்த சீமெந்து பைகளை வாங்க வரும்போது ஓரமாக அடுக்கி இருக்கும் இந்த சீமெந்து பைகளை விற்று வரும் சில்லறைகளை நாங்கள் கொப்பி பென்சில் பேனை இனிப்பு விசுக்கோத்து பொளிச்சி வாங்கப் பாவிப்போம். உந்த சீமெந்து பாக்கில செய்யிற பைகளைத்தான் முந்தி கடையளுக்கு சாமான் வாங்க கொண்டு போறனாங்கள்.

நாங்களும் எங்கள் தேவைக்கு சில வேளைகளில் சீமெந்துப் பையினை அளவாக வெட்டி கூப்பன் மாவை சிரட்டையில் போட்டு சுடுதண்ணீர் விட்டுக் குழைத்து பிஞ்சு வடலி மட்டையில் பிறஷ் செய்து அதனால் குழைத்த மாவைத் தொட்டுப் பேப்பரில் தடவி ஒட்டி சிறிய பைகளை செய்திருக்கிறோம்.அத மாதிரி சீமெந்துப் பையை வெட்டி கொப்பி புத்தகங்களுக்கு உறை போட்டிருக்கிறோம். சிலர் மேசை விரிப்பாவும் பாசல்கள் கட்டவும் பாவிச்சவை. பட்டம் ஒட்ட எல்லாம் உந்தப் பேப்பர் தான் பாவிக்கிறனாங்கள்.

தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் சிசேரியன் செய்யும் போது குறுக்கே வெட்டி குழந்தையை எடுப்பது போல் மண்வெட்டியால் சீமெந்துப் பைகளை குறுக்கால் வெட்டி வயிற்றைப் பிளந்து சீமெந்தை எடுத்த பின் பைகளை வீசிவிடுகிறார்கள் பார்க்க மனசு வலிக்கும்.

அவையும் தேவைக்கு பயன்படுத்திய பின்தெருவில் வீசப்படும் பலரைப்போல் தேடுவாரற்று மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து போகின்றன. அவற்றைப் பார்க்கும் போது வாழ்க்கையில் நன்றாக இருந்து கெட்டுப் போனவர்கள் பலர் ஞாபகத்தில் வந்து போகிறார்கள் .

ஆனாலும் போகிற போக்கில் சூழலை மாசடைதலில் இருந்து காக்கவேண்டும் இயற்கையைப் பேண வேண்டும் என்ற சூழல் நேயக் கருத்துக்கள் வலுப்பெற்று வருவதனால் இவற்றிற்கு மீண்டும் ஒரு மிடுக்கு வரும் போல் இருக்கிறது .

Want your business to be the top-listed Media Company in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Address


Jaffna
40000