Infas
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infas, Education, Kalmunai.
06/06/2026
"எதுவரை சூரியன் சந்திரன் வானிலே மின்னுமோ
அதுவரை நாயகத்தின் மீலாதினை கொண்டாடுவோம்"
வசந்த கால மாதமான ரபிஉனில் அவ்வல் மாதம் மலர்வதற்கு இன்னும் இருப்பது 68நாட்கள் மாத்திரமே...
ஃபிதாக்க ரூஹி யாரஸுலல்லாஹ்💚
ஃபிதாக்க நப்ஸி யாஹபீபல்லாஹ்💚
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்;
பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால்,அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.
இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஸஹீஹுல் புகாரி 662)
10/05/2026
எமது பிரதேசத்திலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்படவுள்ள ஹாஜிமார்களை அறிமுகம் செய்து, வழியனுப்பும் விசேட நிகழ்வும், விசேட துஆ பிரார்த்தனையும்....
#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது_S_M_மஷ்ஹூர்
#தங்கள்_ஹஸனி_ஸகாபி
#காதிரி_வர்ரிபாயி அன்னவர்களின் தலைமையில்...
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இஷா தொழுகையினை தொடர்ந்து வருகை தந்திருந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஜமாஅத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஹாஜிமார்களுடன் முஸாபஹா செய்து, தமது ஸலாத்தையும், பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
#நிர்வாகம்
26/04/2026
எந்தத் துன்பமானாலும் (அது) அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டே ஏற்படுகிறது.
யார் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் 64:11
23/04/2026
துருக்கித் தொப்பி - The Fez Committee
1905ம் ஆண்டில் துருக்கித் தொப்பி இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினையாக மாறிய போது அந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 21 உறுப்பினர் நியமிக்கப்பட்டார்கள். அதில் 10 உறுப்பினர்கள் இங்கு இடம்பெற்றுள்ளார்கள்
முதல் வரிசை அமர்ந்தவர்கள் L 2 R
1.S. L மஹ்மூது ஹாஜியார் ( இலங்கை ஷாதுலிய்யா தரீக்காவின் சிரேஷ்ட உறுப்பினர்
2.மரியாதைக்குரிய W M அப்துர் ரஹ்மான்
(Sir ராசிக் பரீத் அவர்களின் தந்தை, இலங்கை Museumஐ நிர்மாணித்த வாப்பிச்சி மரிக்காரின் மகன் )
3. சட்டத்துறை வல்லுனர் Barrister மௌலவி ரபியுத்தீன் அஹமத் (மும்பாய்)
( In Central)
4. Sir முஹம்மத் மாக்கான் மாக்கார்
( உஸ்மானிய கிலாபத் மற்றும் துருக்கிக்கான இலங்கையின் - Consul General)
5 ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ
(கொடை வள்ளல்.வெளிநாட்டு சட்டவல்லுனர்களை அழைத்து வருவதில் முன்நின்று பணியாற்றியவர்)
2ஆம் வரிசை Standing R 2 L
1.I L M மீராலெப்பை மரிக்கார்
2. வழக்கறிஞர் M C அப்துல் காதர்
(துருக்கித் தொப்பிக்காக நீதிமன்றில் வாதாடிய வழக்கறிஞர்)
3. I L M அஸீஸ்
(Sir பொன்னம்பலம் இராமநாதனின் முஸ்லிம்களுக்கு எதிரான வாதங்கள் பொய்யானவை என நிறுவியவர், மருதானைப் பள்ளிவாசல் தலைவர்)
4. C M மீராலெப்பை மரிக்கார்
5. A L அப்துல் கரீம்
துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி அறிய முதல் Comment ஐ பார்வையிடவும்.
சமூக அடையாளத்தைப் பாதுகாக்கப் போராடிய எமது முன்னோர்களுக்கு இறைவன் அருள்புரிவானாகவும்.
Fazhan Nawas - History
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Website
Address
Kalmunai