Slmc kandy central province
official page of Sri Lanka Muslim Congress Kandy- central province
22/06/2026
புத்தளம், கரைத்தீவு இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட பொன்பரப்பி சுப்பர் லீக் (Ponparappi Super league) கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் கடைசி நாளான நேற்று (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உதுமான் லெப்பை, புத்தளம் மாநகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதுருதீன், பர்வீன் ராஜா வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் நிதால், உயர்பீட உறுப்பினர்களான ஜௌபர் மரைக்கார், றிழ்வான் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், மாநகர சபை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான Champion கிண்ணமும் பணப் பரிசிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் பர்வீன் ராஜா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கான Runners up கிண்ணமும் பணப் பரிசிலும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமான் லெப்பை மற்றும் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரனீஸ் பதுருதீன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kandy
20K