City Rider's - PTK
Sports Team & Social Work
23/06/2025
மீண்டும் ஒருமுறை சாதனை படைத்த CITY RIDER'S கழகம்.
வேட்டையன் முறிப்பு வள்ளுவர் கழகத்தினால் நடத்தப்பட்ட மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியில் எமது புதுக்குடியிருப்பு சார்பாக பங்கு பற்றிய CITY RIDER'S கழகமானது CHAMPION கோப்பையை சுவீகரித்து மீண்டும் ஒருமுறை தனது சாதனையை நிலைநாட்டியுள்ளது.
பிரேம்குமார் நினைவாக "நண்பர்கள் வெற்றிக்கிண்ணம்" என்ற தொனிப்பொருளில் வேட்டையன் முறிப்பு வள்ளுவர் கழகத்தினால் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி 21,22 June 2025 ஆகிய தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அணிக்கு 7 பேர் கொண்ட இப்போட்டியில் 28 கழகங்கள் பங்கேற்றன. இப் போட்டிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட எமது CITY RIDER'S கழக சிங்கங்கள் மிகவும் துல்லியமாக செயல்பட்டு CHAMPION கிண்ணத்தை சுவீகரித்து "புதுக்குடியிருப்பு" என்ற எமது கிராமத்தின் பெயரையும் பதிவு செய்துவிட்டு வந்தனர்.
இப்போட்டிகளில் விளையாடிய எமது CITY RIDER'S கழக வீரர்கள் அனைவருக்கும் CITY RIDER'S நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
21/06/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
எமது புதுக்குடியிருப்பு மண்ணில் இவ்வருடம் (2025) ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டுப் போட்டியினை எமது ஊர் தனவந்தர்களின் அனுசரணையுடன் CITY RIDER'S கழகத்தினால் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இப்போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்கு எமக்கு உதவி செய்த எமது ஊர் தனவந்தர்கள், வாலிபர்கள், தாய்மார்கள், சிறுவர் சிறுமியர்கள் மற்றும் சகல முறைகளிலும் எமக்கு ஒத்தாசையாக இருந்த அனைவருக்கும் CITY RIDER'S கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
31/05/2025
இன்று (31.05.2025) இடம்பெற்ற மாவட்ட மட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார் மாவட்ட ரீதியில் முதலிடைத்தைப் பெற்ற அல் அமான் கழகம் சார்பாக போட்டியிட்ட அஸ்லம் அல்பர் அவர்களுக்கு CITY RIDER'S கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
03/08/2024
அன்பார்ந்த ரசிகப் பெருமக்களே.....
நீங்கள் அனைவரும் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் CITY RIDER'S கழகத்தின் வினோத உடை போட்டியின் வீடியோவானது EDITING வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து UPLOAD செய்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது.
இன்னும் ஓரிரு நாட்களில் எதிர்பாருங்கள்.
07/12/2023
இலங்கையின் மிகப்பெரிய கம்பெனிகளின் அனுசரணையுடன் CITY RIDER'S கழகத்தினால் நடத்தப்பட இருக்கின்ற Cricket மற்றும் Volleyball சுற்றுப் போட்டிகளின் பரிசானது மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக வழங்கப்பட இருக்கின்ற மிகப் பெருமதி வாய்ந்த பணப் பரிசீல்களாக இருக்கப் போகின்றது.
எனவே
முதலாம் இரண்டாம் பரிசுகள் எவ்வளவாக இருக்கும்???
என்று உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு அமையவே பரிசீல்கள் தீர்மானிக்கப்படும்.
CITY RIDER'S
நிர்வாகம்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Puthukkudiyiruppu
Mannar
41000