Clinton Memorial Foundation

Clinton Memorial Foundation

Share

Charity Organization

07/10/2025
04/10/2025

W H C C Walk

03/10/2025

W H C C ♥️ ✊🏼

🛑முக்கிய அறிவித்தல்:

​எமது கல்லூரியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 6) நடைபெறவுள்ள வீதி நடைபவனியில் அனைத்துப் பழைய மாணவர்களும், கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📌​கவனத்திற்குரியவை:
​கலந்துரையாடலும் ஆடை விபரமும்:

​நடைபவனியில் கலந்துகொள்ளும் பழைய மாணவர்கள் கல்லூரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'T-Shirt'கள் நீல நிற அல்லது கருப்பு நிற டெனிம் கால் சட்டைகள் அணிந்து கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

​பழைய மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவில் கலந்துகொள்ளும் பழைய மாணவர்கள் கட்டாயமாக கல்லுரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'T-Shirt'கள், நீல நிற அல்லது கருப்பு நிற டெனிம் கால் சட்டைகள் அணிந்து வருதல் வேண்டும்.

​இவ் நடைபவனியைச் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துப் பழைய மாணவர்களும் மிகவும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

📌​வாகனப் பேரணிக்கு பதிவு செய்தல்:

​இவ் வீதி நடைபவனியைத் தொடர்ந்து இடம்பெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்ளும் வாகனங்கள் அனைத்தும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டும்.

​பதிவு நடவடிக்கைகள்: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) காலை 9 மணிமுதல் பி.ப 2 மணிவரை எமது கல்லூரியில் இடம்பெறும்.

📌​தொடர்புக்கு:
பதிவு நடவடிக்கைகளுக்கு எமது மன்ற உறுப்பினர் திரு. சதீஷ் தர்சன் அவர்களைத் தொடர்புகொள்ளவும்:
☎️0775101662.

📌​அனுமதி: பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வாகனப் பேரணியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

🛑​முக்கிய அறிவிப்பு: பேரணியில் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை.

📌​பொதுவான கடமை:
​வீதி நடைபவனி மற்றும் வாகனப் பேரணி ஆகியவற்றில் கலந்துகொள்பவர்கள் எமது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாதவாறு நடந்துகொள்வது கட்டாயமானதாகும்.

📌​நிகழ்வில் பங்கேற்பு:
​வீதி நடைபவனி முடிந்தபின் எமது கல்லூரி வளாகத்தினுள் நடைபெறும் நிகழ்வுகளில் பழைய மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அதிபரினால் அழைப்பு விடுக்க பட்டுள்ள நலன் விரும்பிகள் மட்டுமே பங்கேற்க முடியும். (அவர்கள் கல்லூரியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கலந்துகொள்ளுதல் வேண்டும்).
வெளி நபர்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை

​எமது கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இன் நிகழ்வினைச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

​நன்றி.
✍️சு. செல்வா
மன்றச் செயலாளர்

23/09/2025

💥13 Days more to walk💥

Want your organization to be the top-listed Non Profit Organization in Negombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Negombo