IMedia Networks

IMedia Networks

Share

iMedia Networks (Pvt) Ltd. we have been at the forefront in execution of a wide array of filming pro

19/12/2025

புத்தளத்தில் விஷேட விலைக்கழிவுடன்...!
Mega Offer...

#பாடசாலை பாதணிகள்..
#பாடசாலை அப்பியாசக் கொப்பிகள்...
#பாடசாலை Bag கள்... மற்றும்
அணைத்து மாணவர் உபகரணங்கள்...!

04/12/2024

நேற்றைய தினம் இறை அழைப்பை ஏற்று இன்னுயிர் நீத்த, சகோதரர் M.A.M Shibly அவர்களின் மறைவை முன்னிட்டு, iMedia நிர்வாகம் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

புத்தளம் மீலாத் மேடை தொடக்கம்...
எந்த ஒரு இலக்கிய நிகழ்வுகளிலும் அவரது ஈர்க்கும் இனிய குரல்வளத்தால் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றிருந்தவர் சகோதரர் M.A.M Shibly அவர்கள்.

விழுமிய உணர்வுகளை மேம்படுத்தும் இலக்குகளோடு அண்மையில் iMedia நடாத்திய "ஆஹா அந்தக்குரல்" பாடல்போட்டியில் Qatar இல் இருந்த வண்ணம், அதீத சிரத்தை எடுத்து கலந்துகொண்டதுமட்டுமல்லாமல்... பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்று "ஜனரஞ்சகப் பாடகர்" விருதையும் வென்றிருந்தார்...

இயல்பாகவே ஆன்மீக உணர்வு கொண்டவராகவும், பழகுவதற்கு மிகவுமே இனிமையான சுபாவத்தையும், உதவும் உள்ளத்தையும் கொண்டிருந்த சகோதரர் ஷிப்லி அவர்கள், இலக்கிய அம்சங்களில் தமது பாடல் தெரிவுகளில் கூட எப்போதுமே ஒரு விழுமியப்பார்வையை கொண்டிருந்தார்...

அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக...
அன்னாரது மறைவை தாங்கிக்கொள்ளும் சக்தியை அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், உறவுகள் அனைவருக்கும் வழங்குவானாக...
நீண்ட நதிக்கரைகளைக்கொண்ட அவன் வாக்களித்த அழகான சுபணபதிகளில் அவரை வாழச்செய்வானாக..!

---
நிர்வாகம்
iMedia Networks
04-12-2024

21/02/2024

திறமையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு
ஒரு வாய்ப்பு.
-------------

எதிர்வரும் நாட்களில் சிந்திக்கப்படும்....
பல்வேறு விழுமியம் சார் குறும்படங்களில் நடிப்பதற்கு, நடிகர்கள் தேவை...!

சமூகத்தின் பிரச்சினைகளை, தீர்வுகளை, ஆன்மீகத்தை, அழகிய உபதேசங்களை...
உயிரோட்டமாக முன்வைக்கும் இந்த முயற்ச்சிக்கு திரையில் உணர்வுகளை பிரதிபலிக்க உணர்வுள்ள கலைஞர்கள் தேவை...!

உங்களிடம்...
திறமையும், ஆர்வமும், மாற்றங்களுக்கான ஆசையும் இருந்தால்...
இப்போதே இணைந்துகொள்ளுங்கள்...!

எமது படைப்புகளில்...
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் அனைத்துமே...
விழுமிய வரையறைகளுக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்...!

சிறுவர்கள் தொடக்கம், வயோதிபர்கள் வரை..
சகல கதாபாத்திரங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்....!

உங்களது வித்தியாசமான உணர்வுகளை பிரதிபலிக்கும் 3-5 புகைப்படங்களுடன்,
பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு எமக்கு inbox செய்யுங்கள்...

கைகோர்ப்போம்...

வாழ்க்கையின் அடையாளங்களாக...
காலத்தால் அழியாத சிந்தனைகளை காட்சிப்படுத்துவோம்...!

---
Team
iMedia Networks
21-02-2024

Want your business to be the top-listed Photography Service in Puttalam?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


14/1, Poles Road
Puttalam
61300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00