KAVIN VLOGS
KAVIN VLOGS| YOUTUBE | KAVINAYAN01 | SRILANKA | TRINCOMALEE | VLOGER | TIKTOK
திருகோணமலை காட்டுப்பகுதியில் கெப் வாகனத்துடன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
திருகோணமலை-
பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த மரக்கறி கடை உரிமையாளரான செல்லையா ஜெயரூபன் (42 வயது) எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 12ம் திகதி கெப் வாகனத்துடன் காணாமல் போனதாக கூறப்படும் குறித்த நபரின் வாகனம் அதிகாலை 2.40 மணியளவில் வில்கம் விகாரை பகுதியை தாண்டி மொரவெவ பகுதிக்கு செல்வதை சிசிடிவி காணொளி மூலம் கண்டறியப்பட்டதாகவும் அதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த வாகனம் மொரவெவ பிரதேசத்தை தாண்டி செல்லவில்லை என சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து பம்மதவாச்சி பகுதியில் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் வீதியூடாக பொலிஸார் சென்ற போது காட்டு வழியினூடாக கெப்வாகனம் சென்ற வேளை வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து விழுந்த நிலையில் விழுந்து கிடந்ததை பொலிஸார் அவதானித்ததாகவும் இதனை அடுத்து அவ்வழியின் ஊடாக சென்று பார்த்த போது EP DAC-9245 என்ற இலக்கமுடைய டாட்டா கெப் வாகனத்தில் எறியூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
100/120, SALLI SAMPALTHIVU
Trincomalee