mafaz_poem

mafaz_poem

Share

கற்பனையில் வெடிக்கும்
கவிதைகளின் சிதறல்

13/05/2025

இன்னமும் திண்ணமானது
அந்தக் கூட்டத்தின்
திட்டம் பற்றியும்,
எடுத்துரைப்பது பற்றியும்,
எடுத்துக் கொள்ளாதது பற்றியும்,
நேரம் இருக்க போவதில்லை...
பற்றி எரியட்டும்
பெருவிரலின் உராய்வும்
உலகத்தின் அம்சத்தையும்
கண்டு கழியட்டும்.
உற்பத்தி செய்யப்பட்டத்தனை
ஆயுதங்களும்
பயன்படாமல் இருப்பதையறிந்த...
வியாபாரத்தின் உத்தி,
சுத்திக் கொண்டது
நாடுகளிடையில்,
புத்திக்குள்
ஏற்படுத்திக் கொண்டது பகையை
இராஜதந்திரத்தின் உவகை
விற்கப்பட்டது தீர்ந்தது வெடிகள்
திணிக்கப்பட்டது பல நொடிகள்.

✍️🏻மபாஸ்📿

01/01/2025

எப்படியும்
எழுதப்பட்டதும், நிகழ்த்தப்பட்டதும்
ஆண்டாண்டாக...
நகலெடுக்காத நிகழ்கணத்தை
எவ்வாறு நிறுத்தி வைக்கலியலாதோ...
அவ்வாறான குறுக்கீடு.

அபயம் விதியாகலாம்,
சில சமயம் கதியும் நோகலாம்,
கோர்த்துக் கொண்டதை
தவிர்த்துக் கொள்ளவும்,
திருத்திக் கொள்ளவும்,
மதியும் கூறலாம்.

இம்முறை விரலிடுக்கின்
வீரியம் மையில் நிறைவாகும்,
கற்பனை பலமுறை
கைது செய்யப்படவில்லை...
எண்ணோட்டத்தின் அறை
இருட்டின் திருட்டு
விழிகளை இருக்கி மூடிக்கொண்டது,
இறையின் கரையாகதே சித்தமும்
இரையின் தரையோடும் நித்தமும்
தழுவிக் கொள்வதின்
உடலுள்ளிருக்குமுலகின் உரையானது.

✍️🏻மபாஸ்📿

11:45

23/11/2024

நிறைவேற்றலுக்குள் உட்படாதாசை,
தீராத தனிமைப்படுத்தலில்
மூழ்கடிக்கப்பட்டது.
அத்தனை கனவுகளும்
எத்தகையானது,,,
தொடர் பயணம் தேடியதில்
தொலைதூரம் சென்று
தொடுவானம் இருண்டதை இறக்கிவிட
பெருக்கிட்டது விடியுமெல்லை.

✍️🏻மபாஸ்📿

Want your public figure to be the top-listed Public Figure in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Trincomalee