Trinconet

Trinconet

Share

உண்மையின் தரிசனம்

Photos from Trinconet's post 13/10/2025

திருகோணமலையில் பொது பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துதல்

நேற்று காலை, திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்ற ஒரு பயனுள்ள கலந்துரையாடல்.

இவ்அமர்வில் அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனவிரத்ன, ஐஜிபி பிரியந்த வீரசூரிய, எஸ்டிஐஜி (கிழக்கு மாகாணம்) வருண ஜெயசுந்தர மற்றும் மாவட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டம் முழுவதும் பொது பாதுகாப்பு, சட்ட அமலாக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களை விவாதிக்கப்பட்டது. டிஐஜிக்கள், பிரிவு எஸ்எஸ்பிக்கள், எஸ்பிக்கள், ஏஎஸ்பிக்கள், ஓஐசிக்கள் மற்றும் பிற தரவரிசை அதிகாரிகள் பங்கேற்பது நமது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான சூழலை உறுதி செய்வதற்கான கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலித்தது. இக்கலந்துரையாடலில் மாவட்ட பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் கலந்து கொண்டார்.

Photos from Trinconet's post 06/10/2025

இலங்கை தபால் திணைக்களத்தின் தபால் உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

இலங்கை தபால் திணைக்களத்தின் தபால் உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (06) காலை அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்றது.

2021 ஆம் ஆண்டிற்கு பின் இலங்கை தபால் துறையில் நிரந்தர தபால் உதவியாளர் நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், கடந்த ஆண்டு இறுதிக்குள் தபால் திணைக்களத்தில் தபால் உதவியாளர் பதவிக்கு 1982 வெற்றிடங்கள் நிலவின.

அதன்படி தபால் திணைக்களத்தில் பதிலீட்டு ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டு, தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களில் இருந்து 731 பேர் இம்முறை ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் 269 தபால் உதவியாளர்களை விரைவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Photos from Trinconet's post 05/10/2025

இன்று திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) மாதாந்த கூட்டம் இயக்கத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

05/10/2025

14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- இளைஞனுக்கு விளக்கமறியல்!!

14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ஜெயக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.பீ..அன்பார் முன்னிலையில் இன்று (05) சந்தேக நபரை ஆஜர் படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை செல்லக்கூடிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 மற்றும் சிறுவர் நன்னடைத்தைகள் திணைக்களம் போன்றவற்றிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து குறித்த பாடசாலை மாணவியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரான 18 வயது இளைஞனை தண்டனை சட்டக் கோவை 364 கீழ் கைது செய்து எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
TrincoMedia

Photos from Trinconet's post 05/10/2025

இன்று உதைபந்தாட்டச் சமர்!
இன்றைய தினம் 05.10.2025 திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் சிங்காரவேலு ஞாபகார்த்த கிண்ணத்திற்கான 🏆 உதைபந்தாட்டப் போட்டிகள் காலை முதல் இடம்பெறவுள்ளன உதைபந்தாட்ட ரசிகர்களே உங்கள் ஆதரவை 👏 மாணவச் செல்வங்களுக்கு வழங்குங்கள்.
ஏற்பாட்டாளர் திருவாளர். சிங்காரவேலு சசிகுமார்

Photos from Trinconet's post 04/10/2025

தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரியின் சார்பில் வலயமட்ட நவராத்திரிப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்.

தரம்2,3
மனனம் ஹ.ஸர்வேஷ் 3ம் இடம்
பேச்சு வி.குகாசன் 2ம் இடம்

தரம்4,5
மனனம் பி.லித்திகேஷ் 2ம் இடம்
சரம் கட்டுதல் கி.ஷஸ்மித் 2ம் இடம்

தரம் 6,7,8
சமய வினா விடை சி.சஜிதன் 1ம் இடம்
மாலைகட்டுதல் சு.விஷ்வப்பிரதீப் 1ம் இடம்
பண்ணிசை சூ.மிதுன் 1ம் இடம்

தரம் 9,10,11
சமய வினா விடை ரு.சத்தியன் 2ம் இடம்

தரம் 12,13
கோலம் ஆ.சவினேஸ், செ.விடேஸ்வர் 1ம் இடம்

விவாதம் ர.லதிக்க்ஷன், சி.டனுசாகர், ஜெ.ஆகீஷன் 1ம் இடம்.
அனைவருக்கும் வாழ்த்துகள்...

Want your business to be the top-listed Media Company in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Trincomalee