RB For Nation

RB For Nation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RB For Nation, Media/News Company, Vavuniya.

11/01/2023

L E A D E R
4
N A T I O N

Photos from RB For Nation's post 10/01/2023

மன்னார் மற்றும் முசலி பிரதேச சபைக்குற்பட்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கான கலந்துரையாடல் இன்று கெளரவ. தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது,

Photos from RB For Nation's post 10/01/2023

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மன்னார், மாந்தை பிரதேசத்துக்குற்பட்ட முக்கியஸ்தர்களுக்கும், கெளவர தலைவருக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்ற போது,

ACMC MEDIA UNIT

27/12/2022

மன்னார், வெள்ளிமலை பதியுதீன் அ.மு.க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா கடந்த 2022.12.15 அன்று பாடசாலையின் அதிபர் றயீசுத்தீன் தலைமையில் இடம்பெற்ற போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
றிசாத் பதியுதீன் பிரதம அதீதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

2022.12.15 | | | |

றிசாத் பதியுதீன் செய்த சேவைகள்தான் என்ன? #Musali_Mannar 27/12/2022

றிசாத் பதியுதீன் செய்த சேவைகள்தான் என்ன?

Video : https://youtu.be/zcYzEmMD4dA

Rishad Bathiudeen

றிசாத் பதியுதீன் செய்த சேவைகள்தான் என்ன? #Musali_Mannar முசலியில் ஒரே ஒரு க.பொ.த பாடசாலைதான் இருந்தது.!மனம் திறக்கும் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.உவைஸ்Video By : #...

21/12/2022

“எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது” - ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பில் (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில், மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் எல்லை நிர்ணய திருத்தம் சம்பந்தமாக, தமது கட்சிக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை, ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கையளித்தார்.

அத்துடன், கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தேர்தல் முறையிலே குளறுபடிகள் இருந்ததினால், அந்தத் தேர்தல் முறையானது பாரிய தோல்வியை ஏற்படுத்தியது எனவும் ஆணைக் குழுவின் தலைவரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களிலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் பட்சத்தில், சமூக ரீதியான மற்றும் இனரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக பாரிய சவால்ககளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

எனவே, பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடத்துகின்ற பட்சத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் எதிர்பார்க்கின்ற அளவிலான குறைப்பை செய்ய முடியும் எனவும் எடுத்துரைத்தார்.

பழைய விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு எனவும், அதற்குரிய சிபாரிசை எல்லை நிர்ணய ஆணைக் குழு அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அனுமதிக்க வேண்டாம் எனவும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹமீட் மற்றும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Media Company in Vavuniya?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Website

Address


Vavuniya