SMK Signature

SMK Signature

Share

Selvaranjiny Selvarasa

28/05/2026

19 நாட்களே ஆன கைக்குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற அதிர்ச்சி - தாய் உட்பட 6 பேர் கைது!

புத்தளம் மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 19 நாட்களே ஆன ஆண் கைக்குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் தாய் உள்ளிட்ட 6 பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ – அடிகம பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் அம்பலமாகியுளது குழந்தையை வாங்க வந்தவர்களும் சிக்கினர்!
காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்,
➡️குழந்தையை வாங்க தயாரான தம்பதியினர்
➡️ குழந்தையின் தாய்
➡️ அவரது மூத்த சகோதரர்
➡️ சகோதரரின் மனைவி
➡️ சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனின் சாரதி

ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு பேரம்!
முதற்கட்ட விசாரணைகளில், 19 நாட்களே ஆன அந்தக் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 😡

வேனும் பறிமுதல்!
குழந்தையை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேனையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

😡விசாரணையில் வெளிவந்த புதிய அதிர்ச்சி!
இந்த குழந்தை விற்பனை நடவடிக்கையில் நடுநிலையாளராக ஒருவர் செயல்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு மருத்துவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாகவும் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு!
“ஒரு குழந்தையையே விற்கும் நிலைக்கு சமூகம் போய்விட்டதா?” என சமூக வலைத்தளங்களில் மக்கள் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டு வருகின்றனர்.

⚖️ கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27/05/2026

Sometimes my behavior also looks like “loading… please wait” 🤣😅
Life without little madness = very boring 😜✨
Just Fun • Comedy • Fly High 🚀😂

20/05/2026

☕❤️ Are You a Tea Lover? ❤️☕

Do you love the perfect combo of Tea + Bun? 🫖🥯
Nothing feels better than enjoying a hot cup of tea with a soft, tasty bun! 😋

If you are a true tea lover, comment Red Colour ❤️ in the comments below! 👇❤️

☕ Tea Lover
💖 Ammu

❤️

Want your business to be the top-listed Business in Klang?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


No47 Lorong Istana
Klang